சூர்யாவின் கருப்பு படத்திற்கு வந்த சிக்கல்…

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த கருப்பு படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கூட வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு காரணம் கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை இன்னும் எந்தவொரு ஓடிடி நிறுவனமும் வாங்க முன் வராதது தான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 45 படத்திற்கு அந்த சிக்கல் இல்லை.
லக்கி பாஸ்கர் படத்தின் தரமான வெற்றியே சூர்யா 45 படத்தின் டிஜிட்டல் உரிமையை மறுபேச்சு சொல்லாமல் படம் ரெடியாவதற்கு முன்பு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறது.
அதிகபட்சமாக 85 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் சூர்யா 45 படத்தின் டீலை முடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.