தமிழுக்கு வரும் கன்னட நடிகை… யார் இந்த பியூட்டி

கன்னட சினிமா மற்றும் டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சான்யா அய்யர்.
நம் அம்மா ஷாரதே, அரசி, புட்டகவுரி மதுவே போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர். , கஜா, முகபுதா மற்றும் விமுக்தி போன்ற படங்களிலும் நடித்தார்.
அவர் கன்னட பிக்பாஸ் ஓடிடி சீசன் 1 டைட்டில் வின்னராகவும் இருந்தார்.
கடந்த ஆண்டு வெளியான இந்திரஜித் லங்கேஷின் ‘கவுரி’ படத்தில் நாயகியாக நடித்தார். சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றார். இந்த நிலையில் விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் பலனாக இப்போது நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம்.
என்மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் ரசிகர்கள், என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி. மொழிகளை தாண்டி பயணிக்க வேண்டும் என்பது என் ஆசை விரைவில் நிறைவேற போகிறது. விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.