எதிர்பாராத ஒன்று 40 வயதில் நடந்துள்ளது! உருகினார் தனுஷ்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷுக்கு 40வயதில் யூத் ஐகான் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. யூத் ஐகான் விருதை பெற்றுக்கொண்ட தனுஷ், இது தான் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு என்று உருக்கமாக பேசியுள்ளார்.
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என பல தரமான படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், நடிகராக மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரினாமங்களில் வலம் வருகிறார்.
நடிகராக தேசிய விருது, பிலிம்பேர் விருது உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ள தனுஷுக்கு, மேலும், ஒரு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனுஷுக்கு வழங்கினார்.
தனுஷுக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்ட போது, நடிகைகள் குஷ்பூ, ஷோபனா, இயக்குநர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், யூத் ஐகான் விருதை பெற்றுக்கொண்ட தனுஷ், தனது திரை வாழ்வில் இவ்வளவு உயரத்திற்கு வருவேன், 40 வயதில் யூத் ஐகான் விருது வாங்குவேன் என்று நினைத்ததே இல்லை.
சாதிக்க இன்னும் பல கனவுகள் உள்ளன, இந்த நேரத்தில் பெற்றோருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.
தனுஷின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இந்த யூத் ஐகான் விருது பார்க்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே பல வித்தியாசமான, சவாலான கேரக்டர்களில் நடித்து வரும் தனுஷ், இன்னும் பல சாதனைகளை படைப்பார் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.