11 வருடங்களுக்கு பின் தமிழில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா

தன்னுடைய திரை பயணத்தை குழந்தை நட்சத்திரமாக துவங்கி, பின்னர் கதாநாயகியா மாறி வெற்றிகண்டவர் தான் நடிகை நஸ்ரியா.
கடந்த 2006 ஆம் ஆண்டு, ‘பழுங்கு’ என்கிற மலையாள படத்தில் அறிமுகமான இவர், பின்னர் சில வருடங்கள் கழித்து 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குனராக அறிமுகமான, ‘நேரம்’ திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக ‘நையாண்டி’ படத்தில் நடித்தார்.
மலையாளம் மற்றும் தமிழில் தீவிர கவனம் செலுத்தி வந்த நஸ்ரியா, நடிகர் பகத் பாசிலை 2014 ஆம் ஆண்டு காதலித்த திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியா பகத் பாசிலுடன் இணைந்து ‘பெங்களூரு டேஸ்’ திரைப்படத்தில் நடித்த போது, இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் நஸ்ரியா 19 வயதில் தன்னைவிட 17 வயது மூத்த பகத்தை திருமணம் செய்து கொண்டது, அப்போது சமூக வலைதளங்களில் அதிக விமர்சனங்களுக்கு ஆளானது. திருமணத்திற்கு பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி இருந்த நஸ்ரியா, மீண்டும் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ‘ட்ரான்ஸ்’ திரைப்படம் மூலம் மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த நஸ்ரியா, இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘அண்டே சுந்தரணிக்கி’ என்கிற திரைப்படத்திலும் நடித்தார். அதே போல் மலையாளத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘சூட்சம தர்ஷினி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மற்ற மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தாலும்…. தமிழில் தான் எதிர்பார்த்த கதை கிடைக்காததால் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சுமார் 11 வருட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தமிழில் உருவாக உள்ள ‘தி மெட்ராஸ் மிஸ்ட்ரி ‘ என்னும் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது .
நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் கடந்த சில வருடங்களாகவே தமிழில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான மாமன்னன், வேலைக்காரன், மாரீசன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கணவருக்கு போட்டியாக தமிழில் நஸ்ரியாவும் களமிறங்குவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.