பிரபல நடிகைக்கு வைக்கப்பட்ட சூனியம்… ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக 90ஸ்-களில் வலம் வந்தவர் மோகினி. இவர் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
திரையுலகில் பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 1999ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை மோகினி அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதில் “எனக்கு திருமணமான பின் குழந்தை, கணவர் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் எதோ ஒரு விதமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவதை தெரிந்துகொண்டேன். எனது வாழ்க்கையில் தவறாக எதுவும் நடக்கவில்லை, ஆனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் முயற்சி செய்தேன். ஒரு முறை அல்ல ஏழு முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்” என கூறினார்.
மேலும் பேசிய அவர், “அப்போது நான் ஒரு ஜோசியரை சந்தித்தேன், அவர் எனக்கு சூனியம் வைத்து இருப்பதாக சொன்னார். அதை கேட்டு முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. பின் தற்கொலைக்கு முயற்சி வரை செல்ல வேண்டிய காரணம் என்ன என்று யோசித்தேன். அதன் பின்தான், அதிலிருந்து வெளிப்படுவதற்கான முயற்சிகளை எடுத்தேன். அதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய ஜீசஸ்” என கூறியிருக்கிறார்.