விஜய் – சிவகார்த்திகேயன் மோதல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறார். அவரது கடைசி படமாக ஜனநாயகன் படம் தான் வர இருக்கிறது.
பொங்கல் ஸ்பெஷலாக 2026 ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 2026 ஜனவரி 14ம் திகதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் இறுதி படம் என்பதால் இப்படித்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் அதேவேளை, விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகின்றது.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கிய அரசியல் கட்சியின் தயாரிப்பு நிறுவனமே சிவாவின் பராசக்தி படத்தை தயாரிக்கின்றது.
இதனால் விஜய்யின் படத்திற்கு போட்டியாகவே தங்களுடைய பராசக்தியை இறக்குகின்றனர் என பேசப்படுகின்றது.
அது மட்டுமின்றி அரசியல் – சினிமா இரண்டுக்கும் இடையில் சிக்கியிருந்த சிவகார்த்திகேயன் இப்படத்தை தள்ளி வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த நிலையில் அது கைகூடாமல் போய்விட்டது.
ஒரே நாளில் வெளியாகவில்லை என்றாலும், ஒருசில நாட்கள் வித்தியாசத்தில் வெளியாவது சிவாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.