ரவி மோகனுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த பராசக்தி, கராத்தே பாபு படக்குழு

நடிகர் ரவி மோகன் பிறந்த நாளில் அவர் நடிக்கும் படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சர்ச்சைகளிலும் இருக்கிறார். ஆனால், இதற்கிடையே ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.
அண்மையில், தயாரிப்பு நிறுவனம் துவங்கி நாயகனாக நடிக்கவுள்ள ப்ரோ கோட் படத்தின் டீசரை வெளியிட்டதுடன் தான் இயக்குநராகும் திரைப்படத்தையும் அறிவித்தார்.
இந்த நிலையில், ரவி மோகனின் பிறந்த நாளான இன்று அவர் நடித்துக்கொண்டிருக்கும் பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படங்களின் சிறப்பு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
இதில், கராத்தே பாபு திரைப்படம் இந்த ஆண்டும் பராசக்தி அடுத்தாண்டும் வெளியாகவுள்ளன.
(Visited 1 times, 1 visits today)