6ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த அதிபர்!

பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபரே இச் செயலை செய்ததாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதாகவும் சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)