“வாழ்நாள் சாதனையாளர்” விருதைப் பெற்றார் கமல்! கொடுத்தது யார் தெரியுமா?
BY MP
May 28, 2023
0
Comments
273 Views
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் நடிகர் கமல்ஹாசன்.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்தவராக இருந்து வருபவர் கமல்ஹாசன்.
இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து, தான் ஒரு பன்முகத்திறமை கொண்டவர் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துவிட்டது. அவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வர உள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் கமல்.
இதுதவிர பா.இரஞ்சித், வெற்றிமாறன், எச்.வினோத் போன்ற முன்னணி இயக்குனர்களும் கமலுக்கு கதை சொல்லிவிட்டு கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். இத்தனை பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் சின்னத்திரையில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்த 6 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார் கமல். மேலும் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது. அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கையால் இந்த விருதினை பெற்றுக்கொண்டார் கமல். வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்