பழைய இராணுவ வாகனங்களை மாற்றும் நியூஸிலாந்து – 2.7 பில்லியன் ஒதுக்கீடு!

நியூசிலாந்து அரசாங்கம் பயன்படுத்தப்பட்ட பழைய இராணுவ வாகனங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய 2.7 பில்லியன் நியூசிலாந்து டாலர்கள் செலவில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது.
இதில் அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள ஹெலிகாப்டர்களும் அடங்கும்.
அமைச்சரவை அமைச்சர்கள் தொகுப்பை வெளியிட்டபோது, வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய பதட்டங்கள் மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழலை மேற்கோள் காட்டினர்.
நியூசிலாந்தின் இராணுவச் செலவு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐந்து கண்கள் புலனாய்வுப் பகிர்வு குழுவில் உள்ள அதன் பெரிய கூட்டாளிகளை விட பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)