உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி – வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ளார்.
நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லிவிட்டா இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த விஷயத்தில் அவா் தொடா்ந்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா்.
இந்தியா மீதான தடையும் அதில் ஒரு பகுதிதான். இது தவிர வேறு பேச்சுவாா்த்தை நடத்துவது உள்பட பல நடவடிக்கைகளையும் அவா் மேற்கொண்டுள்ளார். போரை நிறுத்தியாக வேண்டும் என்பதில் டிரம்ப் மிக உறுதியாக உள்ளார். அதுவும் கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பது அவரின் நோக்கமாக உள்ளது என்றாா்.
(Visited 3 times, 3 visits today)