இந்திய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே இன்று சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு வெளியுறவு அமைச்சர்களின் இருதரப்பு சந்திப்பு மாஸ்கோவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, அமைச்சர்கள் தங்கள் கலந்துரையாடல்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தற்போதைய மற்றும் எதிர்கால வழிகளில் சிறப்பு கவனம் செலுத்துவார்கள் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)