ஜெர்மனி மக்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு
ஜெர்மனியில் புகழ் பெற்ற vodafone நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக விலகி வருகின்றார்கள்.
ஜெர்மனியில் மிக பெரிய தொலைதொடர்பு நிறுவனமான vodafone என்ற நிறுவனத்தை விட்டு பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் விலகி வருவதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது 2023 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர் vodafone விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 1 லட்சத்து 20 பேர் இணையத்தளம் சம்பந்தம் பட்ட ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இதேவேளையில் 90 ஆயிரம் பேர் டி எஸ் எல் என்று சொல்லப்படுகின்ற ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.
தற்பொழுது இந்த vodafone நிறுவனத்தை விட்டு வெளியேறி வேறு நிறுவனங்களில் வாடிக்கையாளராக மாறியுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இதன் காரணமாக vodafone நிர்வாகமானது இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தாங்கள் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யவுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.
அதனால் இழந்த வாடிக்கையாளரை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என odafone நிர்வாகமானது தெரிவித்து இருக்கின்றது.