கூலி செகண்ட் ஹாபில் இருக்கும் மாஸ் சம்பவம்

கூலி படம் வெளியாக இன்னும் சில நாட்களே தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் படத்தின் ஹைப் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது.
இந்த சூழலில் சஸ்பென்சை உடைக்காமல் லோகேஷ் இருந்து வருகிறார்.
அதாவது படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களை ஊடகங்களில் லோகேஷ் பேசி வருகிறார். ஆனால் படத்தின் செகண்ட் ஆப் பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போஸ்டர் கூட வெளியாகவில்லை.
மேலும் ட்ரெய்லரிலும் எந்த காட்சியையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக எதிர்பார்ப்பை மீறி இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகள் இருக்க போகிறது. குறிப்பாக பெரும்பான்மையான காட்சிகள் வன்முறை காட்சிகளாக தான் இடம்பெறுகிறது.
ஆகையால் குழந்தைகளுடன் சென்று இந்த படத்தை பார்க்க முடியாது. மேலும் சென்சாரே ஏ சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறது. பெரும்பாலும் ரஜினிக்கு குடும்ப ஆடியன்ஸ் தான் அதிகம். அப்படி இருக்கும் சூழலில் லோகேஷுக்காக இந்த கதையில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.
அதுவும் பலமுறை கதையைக் கேட்ட பிறகு தான் சம்மதித்தாராம். ஆகையால் ரசிகர்களுக்கு தியேட்டரில் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை செம ட்ரீடாகத்தான் இருக்கப் போகிறது. குறிப்பாக கடைசியில் அமீர்கானின் கேமியோ ரோலும் இருக்கிறது.
எனவே எதிர்பார்க்காத ட்விஸ்டை லோகேஷ் படம் முழுக்க வைத்திருக்கிறாராம். ரஜினி ரசிகர்கள் மட்டுமன்றி மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் கவரும் படி தான் இந்த படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.