மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் பெறுமதி சேர் வரி அறவிடப்படும் என அறிவிப்பு!
துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் 35 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ள் ஏற்றுமதியின் போது முறையான பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதில்லை என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், மேற்படி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் 35 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும்
இந்த வரி கொள்கை முறையாக செயற்படுத்தப்படுகிறது.எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய தகவல்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
மீள் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஏற்றுமதி கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.