மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் தெரியுமா?

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா என்பவரை இர்ண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து அவர் இன்னமும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் முதல் கணவர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் தனது சமையல் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து சமைத்துவரும் அவர்; சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ பெற்று; ரங்கராஜுக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மாதம்பட்டி ரங்கராஜோ தனது முதல் மனைவி ஸ்ருதியை இன்னமும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜாய் கிறிஸில்டாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் என்ற படத்தை இயக்கிய ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் என்பவரை கடந்த 2018ஆம் ஆண்டு கிறிஸில்டா திருமணம் செய்து கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார் என்றும்; அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.