கைதாகின்றாரா மாதம்பட்டி ரங்கராஜ்? புயலாய் வரும் முதல் மனைவி

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டா என்கிற ஆடை வடிவமைப்பாளரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறி புகைப்படங்கள் வெளியாகின. கல்யாணம் ஆனதாக கூறிய மறுநாளே தாங்கள் விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக அறிவித்த ஜாய் கிரிசில்டா, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.
அவரின் இந்த பதிவு செம வைரல் ஆனதோடு, மாதம்பட்டி ரங்கராஜையும் மக்கள் கடுமையாக சாடினர். ஏனெனில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி பெயர் ஸ்ருதி. இவர் ஒரு வழக்கறிஞர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதமே மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் காதலர் தினத்தை கொண்டாடியதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாவில் பதிவிட்டதால், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக பேச்சு அடிபட்டது.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏப்ரல் மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தன்னுடைய இரண்டு மகன்களுடன் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ஸ்ருதி, என்னுடைய உலகம் என குறிப்பிட்டிருந்ததோடு, எனது மூன்று குழந்தைகள் என்றும் பதிவிட்டிருந்தார்.
கணவரை குழந்தைபோல் பார்க்கிறார். இவர்கள் பிரிய வாய்ப்பில்லை என ரசிகர்கள் எண்ணி வந்தனர்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் உடன் திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா தாங்கள் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.
அதுமட்டுமின்றி அவரின் குழந்தையையும் தன்னுடைய வயிற்றில் சுமந்து வருவதாக போஸ்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜாய் கிரிசில்டா. இதைப்பார்த்த ஷாக் ஆன ரசிகர்கள், மாதம்பட்டி ரங்கராஜா இப்படி செய்தார் என வாயடைத்துப் போயினர்.
மாதம்பட்டி ரங்கராஜ், முறைப்படி விவாகரத்து பெறாமலேயே ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் திருமணம் செய்துகொண்டதை வெளியில் சொல்லாமல் சைலண்டாக இருந்து வந்துள்ளார்.
தற்போது ஜாய் மூலம் அந்த விவகாரம் வெளியே வந்துள்ளதால் தற்போது மாதம்பட்டி ரங்கராஜுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
விவாகரத்து செய்யாமலேயே மறுமணம் செய்துகொண்டதால் அவர் மீது ஆக்ஷன் எடுக்க அவரது முதல் மனைவி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஒரு வழக்கறிஞர் என்பதால் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம்.
ஒரு வேளை விவாகரத்து கொடுக்காமல் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்திருந்தால் அவர் விரைவில் கைதாகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.