வடிவேலு குறித்து அதிர்ச்சி தரும் தகவல்களை கூறிய சோனா

90ஸ்களின் இறுதியில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனா, நடிகர் வடிவேலு குறித்து அதிர்ச்சி தரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் ‘குசேலன்’ திரைப்படத்தில் அவருடன் நடித்த அனுபவம் குறித்து அண்மையில் யூடியூபில் அளித்த பேட்டி ஒன்றில் சோனா இந்த பரபரப்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“வடிவேலு சார் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதும், அவரை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால், எனக்கு அவருடன் செட்டாகவில்லை.
‘குசேலன்’ படத்தின் படப்பிடிப்பில் அவரது குணாதிசயம் (கேரக்டர்) என்னைப் பலவிதமாகப் பாடாய்படுத்திவிட்டது,” என்று சோனா வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும், “படமும் சரியாகப் போகவில்லை. அதன்பின் எங்களுக்கு (வடிவேலுவுடன் இணைந்து நடிக்க) 16 பட வாய்ப்புகள் வந்தன,” என்றும் குறிப்பிட்டார்.
“என் மானமும் மரியாதையும் எனக்கு மிகவும் முக்கியம். ரோட்டில் நின்று பிச்சைகூட எடுத்துவிடலாம், அந்த மாதிரி நடித்துச் சம்பாதிக்கிற காசு வேண்டாம் என்ற முடிவில் நான் தெளிவாக இருந்தேன்.
வடிவேலுவைப் பற்றி காரித்துப்பும் ஆட்கள் பலர் இருக்கிறார்கள். அவர் நடிப்பில் ஒரு லெஜெண்ட் தான், ஆனால் மனிதராக அவர் மதிப்பில்லாதவர், ‘நோ கமெண்ட்’ (கருத்து இல்லை)” என்று சோனா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சர்ச்சைக்கு வடிவேலு தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.