பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

வயது முதிர்வு காரணமாக நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரது நடிப்பிற்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றார்.
(Visited 4 times, 4 visits today)