“விஜய்க்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் நடந்தது” சூர்யாவுக்காக பேசிய வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் சிறு வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் வனிதா, தற்போது பேட்டி ஒன்றில் சூர்யா விஜய் சேதுபதி பற்றி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது சூர்யா விஜய் சேதுபதி என்பவர் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் இவர் முதன் முதலாக “பினிக்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமாகி திரை உலகத்திற்கு தன் நடிப்பின் திறமையை வெளிக் கொண்டு வந்தார்.
இவர் சிறு பிள்ளை என்பதால் சுட்டித்தனம் மாறாமல் செய்த சிலவற்றை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் பண்ணி கலாய்த்து வருகிறார்கள். இதற்கு வனிதா விஜயகுமார் அவர்கள் சூப்பராக ஒரு பதிலை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அவர்கள் முதன் முதலில் திரையுலகத்திற்கு வந்தபோது அவருக்கு வராத “ட்ரோல்” இல்லை. உருவ கேலி பண்ணாத ஆட்களே கிடையாது அந்த வகையில் அவர் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்தடுத்து முன்னேறிக் கொண்டே சென்றார்.
அது மட்டும் தற்போது திரை உலகில் முன்னணி நடிகராகவும், தனக்கென ஒரு கட்சியை ஆரம்பித்து நல்ல அரசியல்வாதியாகவும், வருங்கால முதல்வராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் அவர்கள்.
அதேபோலத்தான் தற்போது சூர்யா விஜய் சேதுபதி அவர்களும் நிறைய கேளிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகி தவித்துக் கொண்டிருக்கிறார்.
தளபதி விஜய் அவர்களைப் போல சூர்யா சேதுபதி பெரிய ஸ்டார் ஆக வருவார் என வனிதா விஜயகுமார் நச் பதிலை பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ளார்.