அந்த அழகிய நடிகையிடம் நடனம் கற்றுக்கொண்ட சிம்பு

மலையாளத்தில், இயக்குனர் ஃபாசில் இயக்கிய ‘அனியாதி பிரவு’ திரைப்படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன்.
‘யாரடி மோகினி’ ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’ ‘வேலாயுதம்’ , ஈரம் , ஆறுமுகம் , பழனி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அழகும் திறமையும் இருந்தும் கூட, இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இந்த நிலையில் தான் சரண்யா, சிம்புவுக்கு பரதநாட்டியம் சொல்லி கொடுத்த தகவலை, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சரண்யா நடிகை என்பதை தாண்டி, ஒரு பாரத நாட்டிய கலைஞர் ஆவர். இந்த நிலையில் தான், நடிகர் சிம்பு “மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்ள கேரளா வந்தபோது, அவருடைய தலையில் லேசாக அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
சரண்யாவின் கணவர் ஒரு மருத்துவர் என்பதால், இதுபற்றி அறிந்த சரண்யா சிம்புவை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாராம்.
காயம் லேசாக இருந்ததால் அதில் இருந்து விரைவாகவே மீண்ட நடிகை சிம்பு, சரண்யாவிடம் கூறி இங்கு தனக்கு பாரத நாட்டியம் சொல்லி கொடுக்க ஆண் பரதநாட்டிய கலைஞர்கள் இருக்கிறார்களா என கேட்டுள்ளார்.
சரண்யா அதுபோல் இந்த இடத்தில் யாரும் இல்லை. உங்களுக்கு ஆசோதனை இல்லை என்றால் நானே சொல்லி தருகிறேன் என கூறி நடிகர் சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்று கொடுத்தாராம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.