பிரான்ஸில் புலம்பெயர்ந்தோரின் றப்பர் படகை கத்தி கொண்டு கிழித்த அதிகாரிகளால் சர்ச்சை

பிரான்ஸ் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் சென்ற றப்பர் படகை, பிரெஞ்சு அதிகாரிகள் கத்தி கொண்டு கிழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மனிதாபிமானமற்ற செயல் என புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் Osmose 62 அமைப்பின் தலைவர் Dany Patoux கண்டித்துள்ளார். இது புலம்பெயர்பவர்களுக்கு உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.
இந்த நடவடிக்கைகள், கடல்சார் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், புலம்பெயர்பவர்களை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரித்தானியா அரசாங்கம் இந்த புதிய கடுமையான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. ஆனால் Osmose 62 அமைப்பு, இது போன்ற நடவடிக்கைகளால் மனித கடத்தல்காரர்கள் தடுக்கப்பட மாட்டார்கள் என வலியுறுத்துகிறது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் 89 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். இது போர்க் காட்சியைப் போல உள்ளது என்றும், பிரெஞ்சு மற்றும் பிரித்தானியா அரசாங்கம் புதிய கொள்கை மாற்றங்களை அமுலாக்கி வருவதால் நிலைமை மோசமடைவதாகவும் அமைப்பு எச்சரித்துள்ளது.