AK 64 படத்தை தயாரிக்கும் அஜித்தின் தீவிர ரசிகர்

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின.
நடிகர் அஜித் குமாருக்கு ஒரு இயக்குனரின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டால் அவர்களுடன் தொடர்ச்சியாக பணியாற்றுவார். அதன்படி இதற்கு முன்னர் சிறுத்தை சிவா, எச்.வினோத் ஆகியோருடன் தொடச்சியாக படங்களில் பணியாற்றிய அஜித், தற்போது ஆதிக் உடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற உள்ளார்.
குட் பேட் அக்லி படத்தினால் அஜித்தின் கவனத்தை ஈர்த்த ஆதிக்கிடம் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைந்துள்ளாராம் ஏகே. அதன்படி அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளாராம். அதை தயாரிக்கப்போவது யார் என்பது தான் புரியாத புதிராக இருந்து வந்தது.
இந்த நிலையில், ஏகே 64 படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரிடமே ஒப்படைத்து இருக்கிறாராம் அஜித் குமார்.
அந்த தீவிர ரசிகர் வேறு யாருமில்லை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான். இவர் இதற்கு முன்னர் அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் எக்சிக்யூடிவ் புரொடியூசராக பணியாற்றி இருக்கிறார்.
இதுதவிர அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ததும் இவர்தான். தற்போது அவரே அஜித்தின் ஏகே 64 திரைப்படத்தின் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். ஏகே 64 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.