STR ரசிகர்களுக்கு ஒரு குட் நியுஸ்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது.
கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அடுத்து சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூரில் தொடங்கியது.
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, எஸ்டிஆர் 49-வது படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இது குறித்த அறிவிப்பு வீடியோ அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)