பொழுதுபோக்கு

சுதாரித்து கொண்ட சிம்பு… புது கூட்டணியில் உருவாகும் STR 49

சிம்பு இப்போது அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார். சமீபத்தில் கமல், மணிரத்னம் கூட்டணியில் அவர் நடித்த தக் லைஃப் வெளியானது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இதனால் சிம்பு கொஞ்சம் அப்செட்டில் இருந்தது உண்மைதான். ஆனால் அதை ஓரம் கட்டி விட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். அந்த வகையில் தற்போது அவர் கூட்டணி அமைத்திருப்பது வெற்றிமாறனுடன்.

இந்த தகவல் ஆதாரம் இல்லாமல் வந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி அதை உறுதிப்படுத்தியது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் ப்ரோமோ ஷூட் முடிந்துவிட்டது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் சிம்புவின் 49வது படமாக வெளிவர இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று தோன்றலாம்.

ஏனென்றால் அவருடைய 49வது படம் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் வருவதாக இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக டான் பிக்சர்ஸ் சில சிக்கலில் இருக்கிறது.

இதனால் யோசித்துப் பார்த்த சிம்பு ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மூலம் உருவாகும் பராசக்தி, இட்லி கடை பல வேலைகளை முதலில் முடிங்க. அந்த இரண்டு படங்களும் முதலில் வெளியாகட்டும்.

பிறகு நம் கூட்டணியில் படம் தொடங்கலாம் என சொல்லிவிட்டாராம். அதனால் இப்போது வெற்றிமாறனுடன் அவர் இணைந்துள்ள படம் தான் STR 49 ஆக வர இருக்கிறது. இது வடசென்னை சீரிஸ் என்பதும் கூடுதல் தகவல்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content