பொழுதுபோக்கு

AK 64 – அஜித் வாங்கிய சம்பளம்தான் இப்ப ஹாட் நியூஸ்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாகவும் GBU மாறியுள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கவுள்ளார்.

ஆம், AK 64 படத்தை ஆதிக் இயக்க பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ்தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதற்கான பேச்சு வார்த்தை முடிந்த இந்த மாதம் இறுதியில் சம்பளம் அட்வான்ஸ் தரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், AK 64 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 180 கோடி சம்பளம் வாங்கவுள்ளாராம். தனது கடைசி படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியிருந்த அஜித், இப்படத்திற்காக ரூ. 180 வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ. 12 கோடி சம்பளம் என கூறுகின்றனர். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்