சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானம்!
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றன பின்னணியில் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் அவசியம் என பிரதான எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஒத்திவைப்டுபு விவாதம் நடைபெறவுள்ளது.
குறித்த விவாதம் வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற அமர்வு வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 7ஆம் திகதி காலை 09.30 மணிமுதல் காலை 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 10.30 மணிமுதல் மாலை 4 மணி வரை மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
அதேபோல் மார்ச் 08 ஆம் திகதி அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் கட்டளைகள் மீதான விவாதமில்லாமல் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரச நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள 24 யோசனைகளுக்கு அனுமதி பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சர்வஜன வாக்குரிமை குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.