ரெடியானது ஜனநாயகன் கிளிம்ப்ஸ் : எப்போ ரிலீஸ் தெரியுமா?

தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படம், விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன் அவர் நடிக்கும் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எச். வினோத் இயக்கும் இந்த அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் தகவல்களின்படி, ‘ஜனநாயகன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நடிகர் விஜய்யின் 51வது பிறந்தநாளான வருகிற ஜூன் 22 அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கிளிம்ப்ஸ் வீடியோ, படத்தின் கதைக்களம், ஆக்ஷன் காட்சிகள் குறித்த ஒரு ஐடியாவை ரசிகர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான பாதுகாப்புடன், பெரிய விளம்பரம் இல்லாமல் படப்பிடிப்பு நடந்தது.
கடைசி நாளில், விஜய் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், ஆனால் பெரிய கொண்டாட்டங்களைத் தவிர்த்ததாக கூறப்படுகிறது.