தமிழ்நாடு

மலேசியாவிலிருந்து அரிய வகை உடும்புகளை கடத்தி வந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் கைது

கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பத்திக் ஏர் விமானத்தில் கடத்திவரப்பட்ட இரு அரிய வகை உடும்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டபோது அவ்விரு உயிரினங்களை அதிகாரிகள் கண்டறிந்ததாகக் கூறப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த உடும்புகள் எவ்வகையைச் சேர்ந்தவை, அவை எவ்வாறு கடத்தி வரப்பட்டன, இங்கு யாரிடம் ஒப்படைப்பதற்காக அவை கடத்தப்பட்டன போன்ற விவரங்களை வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் சுங்கத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

உடும்பைக் கடத்தி வந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!