நமீபியாவில் உள்ள ஒரு சஃபாரி லாட்ஜில் சுற்றாலப்பயணி ஒருவரைக் கொன்ற சிங்கம்
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்கிலுள்ள நமிபியாவின் சொகுசு கூடார விடுதியில் 59 வயது நபரை சிங்கம் ஒன்று கொன்றதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
நமிபியாவின் வடமேற்குப் பகுதியில் மற்ற சுற்றுப்பயணிகளுடன் வந்திருந்த நபர், காலை நேரத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
கழிவறையைப் பயன்படுத்தத் தமது கூடாரத்திலிருந்து அந்த நபர் வெளியேறியபோது சிங்கத்தால் தாக்கப்பட்டார்.
மற்ற சுற்றுப்பயணிகள் சிங்கத்தை இறுதியில் விரட்டியபோதும் அதற்குள் அந்த நபர் உயிழிந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு இந்தச் சம்பவம் பற்றிய அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





