ஹீரோவாக களமிறங்கிய சூப்பர் சிங்கர் புகழ் பூவையார்… வெளியானது ஃபஸ்ட் லுக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.
இதில் தங்களது திறமையை வெளிக்காட்டியவர்கள் இப்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்களின் பேராதரவை பெற்றவர் தான் பூவையார்.
சூப்பர் சிங்கரில் பாட ஆரம்பித்தவருக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு எல்லாம் கிடைத்தது.
விஜய்யுடன் பிகில் மற்றும் மாஸ்டர் படத்தில் நடித்தவர், விஜய் சேதுபதியுடன் மகாராஜா, பிரசாந்துடன் அந்தகன் படத்திலும் நடித்தார்.
தற்போது ஹீரோவாக படம் நடித்துள்ளார் பூவையார். ராம் அப்துல்லா ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வைரலாகி வருகிறது.
அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்க ஜெயவேல் என்பவர் இயக்கியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)