என் எடை கூடியதால் உங்களுக்கு என்ன பிரச்சனை?…ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உலக அழகி என்றால் அது எப்போதும் ஐஸ்வர்யா ராய் தான், 1997ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.
அதன் பின், தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.
தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பின் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட ஐஸ்வர்யா ராய் பல கேலி கிண்டலுக்கு உள்ளானார்.
இந்நிலையில், அவரை உருவ கேலி செய்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார். அதில், ” என்னுடைய மகள் ஆராத்யா பிறந்த பிறகு என் உடல் எடை கொஞ்சம் கூடியது.
ஆனால், நான் உடல் எடை கூடியது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. என்னைவிட என் மீது உங்களுக்கு அக்கறை அதிகமா?
எனது எடையால் எனக்கு எந்த பிரச்சனையும் வரவே இல்லை. என்னை பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டாலும் என்ன பேசினாலும் எனக்கு பிரச்சனை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.