UK – லிவர்பூலின் பிரீமியர் லீக் கோப்பை அணிவகுப்பைக் கொண்டாடிய ரசிகர்கள் மீது மோதிய கார் – 50 பேர் படுகாயம்!
பிரித்தானியாவின் – லிவர்பூலின் பிரீமியர் லீக் கோப்பை அணிவகுப்பைக் கொண்டாடிய ரசிகர்கள் மீது கார் மோதியதில் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே மொத்தம் 20 பேர் காயமடைந்ததாகவும் மேலும் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரண்டு பேர் படுகாயமடைந்ததை வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவை உறுதிப்படுத்தியது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாகனத்தின் கீழ் சிக்கிய மூன்று பெரியவர்களையும் ஒரு குழந்தையையும் மீட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் குழப்பமான காட்சிகளில், வாட்டர் ஸ்ட்ரீட்டில் கூட்டத்தின் வழியாக ஒரு கார் ஒழுங்கற்ற முறையில் சென்று பலரை மோதி காயப்படுத்தியதை காட்டுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





