மிட் நைட்டில் த்ரிஷா செய்த வேலையை கண்டுபிடித்த இயக்குனர்… வெட்கத்தில் த்ரிஷா

42 வயதை எட்டியும் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா நடிப்பில் வரும் ஜூன் 5 – ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து திரிஷா நடனத்தில் ‘சுகர் பேபி’ என்ற 2-வது பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில், நடுராத்திரி 3 மணிக்கு த்ரிஷா சொகுசு கப்பலில் பார்த்த வேலை குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
” மன்மதன் அம்பு படத்திற்காக ஒரு சொகுசு கப்பலில் படம் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நாள் நடு இரவில் யாருமே இல்லாத நேரத்தில், மிட் நைட் ஒரு 3 மணி இருக்கும், த்ரிஷா மட்டும் கடலை பார்த்து “I am the Queen of the World” என கத்திக் கொண்டிருந்தார்.
அப்படியே கட் செய்தால் பொன்னியின் செல்வன் படத்தில் மகாராணியாகவே வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட த்ரிஷா வெட்கத்தில் சிரித்துக் கொண்டே டைட்டானிக் படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ கத்துவது போல க்ரூஸில் போகும் போது யாரும் இல்லையேன்னு அப்படி பண்ணிட்டேன் சார். என்று பதிலளித்துள்ளார்.