ஜனநாயகன் படத்தில் நடிக்க மறுத்த டிக் டாக் பிரபலம்… காரணம் இதுதான்

விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு ஒட்டு மொத்த சினிமாவும் இந்த படத்தை எதிர்பார்த்து வரும் நிலையில் ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை டிக் டாக் பிரபலம் கனி தவறவிட்டிருக்கிறார்.
ஜனநாயகன் படத்தில் டிக் டாக் பிரபலம் கனிக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.
ஆனால் அந்த கதாபாத்திரம் கனிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ஜனநாயகன் படத்தின் வாய்ப்பை நிராகரித்ததாக கூறியிருக்கிறார்.
மேலும் கனியின் தந்தை யூடியூப் சேனலே தொடங்கக்கூடாது என்று ஆரம்பத்தில் கூறிவிட்டாராம்.
அதன் பிறகு கெஞ்சி கூத்தாடி தான் அனுமதி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் படங்களில் நடிக்க அவரது தந்தை சம்மதிக்க மாட்டார் என்பதை திட்டவட்டமாக கனி கூறி இருக்கிறார். மேலும் யூடியூபில் வரும் வருமானமே போதும் என்று சொல்லி உள்ளார்.
அதன் மூலம் தங்களது குடும்பத்தை நடத்தி வருகிறோம். மேலும் ஜனநாயகன் படம் மட்டுமல்லாமல் வேறு சில படங்களிலும் தனக்கு வாய்ப்பு வந்தது. அந்தப் படங்களையும் நிராகரித்து விட்டதாக கனி கூறி உள்ளார்.