புதிய உலகில் புதிய ஐரோப்பா : அல்பேனியாவில் ஒன்றுக்கூடும் 47 நாடுகளின் தலைவர்கள்!

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள 47 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், அல்பேனியாவின் தலைநகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிரானாவில் நடைபெறும் ஐரோப்பிய அரசியல் சமூகம் அல்லது EPC உச்சிமாநாட்டின் கருப்பொருள் “புதிய உலகில் புதிய ஐரோப்பா என்பதாகும்.
கண்டத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் அங்கீகரிக்கப்படாத இடம்பெயர்வைச் சமாளிப்பதற்கான வழிகளை கண்டறிய இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும்.
2022 ஆம் ஆண்டு பிராகாவில் நடந்த தொடக்க உச்சிமாநாட்டில், அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் தலைவர்கள் நீண்டகால எதிரிகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் அரிய பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை தொடர்ந்து இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.