விஜய்யுடன் முதன்முறையாக இணையும் பிரியங்கா?

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
ஆனால், தமிழில் வெளியான பிரதர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரியங்கா மோகனின் அடுத்த புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 14வது திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இது உண்மையான தகவலாக இருக்கும் பட்சத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் பிரியங்கா மோகன் முதல் முறையாக கைகோர்க்கிறார்கள்.