விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இணையும் மூன்றாவது படம்

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
அவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா (VD) உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் அந்த செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது முறையாக படத்தில் ஒன்றாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஷியாம் சிங்கா ராய் பட இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்க உள்ள படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.