இலங்கையின் பல பகுதிகளில் இன்று கடும் மழை!
																																		இலங்கையின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மத்திய, ஊவா, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
(Visited 20 times, 1 visits today)
                                    
        



                        
                            
