உக்ரைன் போரை நிறுத்த நிரந்தர போர்நிறுத்தம் கோரும் டிரம்ப்

உக்ரைன் போரை நிறுத்த நிரந்தர போர்நிறுத்தமே தீர்வு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரின் செயல்பாடுகள் மீது டிரம்ப் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)