ரஷ்யா நினைத்திருந்தால் உக்ரைன் கதை முடிந்திருக்கும் – திடீரென புட்டின் பக்கம் சாய்ந்த டிரம்ப்

ரஷ்யா விரும்பியிருந்தால் உக்ரைனை முழுவதுமாகக் கைப்பற்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அப்படிச் செய்யாமல் விட்டதே பெரிது. உக்ரைனுக்கு அது பெரிய சலுகை என கூறிய டிரம்ப் புட்டினையும் குறைகூறியுள்ளார்.
அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மொஸ்கோவில் புட்டினுடன் பேச்சு நடத்தவிருக்கும் நிலையில் டிரம்ப்பின் கருத்து வெளிவந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினை மிக அரிதாக டிரம்ப் தமது Truth Social தளத்தில் குறைகூறினார்.
உக்ரேன் மீதான தாக்குதல்களைத் புட்டின் நிறுத்த வேண்டும். ரஷ்ய, உக்ரேனியப் பூசலில் சண்டை நிறுத்தத்துக்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது தமக்குப் பிடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 9 times, 9 visits today)