மீண்டும் சினிமாவில் அப்பாஸ்

நடிகர் அப்பாஸ் 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாய் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். முன்னணி நடிகராக வலம் வந்த அப்பாஸ், திடீரென சினிமாவிலிருந்து விலகி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.
கிட்டதட்ட 10 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருக்கும் நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் சற்குணம். களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் தற்போது வெப் சீரிஸ் ஒன்று உருவாகி வருகிறது. இந்த வெப் சீரிஸில் இளம் சென்சேஷனல் நடிகை துஷாரா விஜயன் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அப்பாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்கவேண்டும் என எதிர்பார்த்த ரசிகர்களளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகியுள்ளது. கண்டிப்பாக அப்பாஸின் கம் பேக் சிறப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றனர்.