அமெரிக்காவின் அழுத்தம், அச்சுறுத்தல்களால் நெருக்கடி – சீனா வெளியிட்ட தகவல்
சீன-அமெரிக்க வர்த்தகப் பிரச்னையை தீர்க்க முடியாது என சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் தற்போதைய பிரச்சினை நீடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி விதிப்பு குறித்து, பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நியாயமான பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான எதிர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன இறக்குமதிப் பொருள்கள் மீது டிரம்ப் 145 சதவீத வரி விதித்த நிலையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா 84 சதவீத வரியை விதித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





