தனது மகனின் இழப்பால் மிகவும் பாதிக்கப்பட்ட பாரதிராஜா

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் யாரும் எதிர்ப்பாராத பிரபலத்தின் உயிரிழப்பு நடந்தது.
அதாவது இயக்குனர் மகனான மனோஜ் பாரதிராஜாவின் மகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே வருத்தப்பட்டு தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.
மனோஜ் அவர்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்பாவின் ஆசைக்காக தாஜ்மஹால் படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கினார், ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. பின்பு தனக்கு ஆசையாக இருந்த இயக்குனர் ரூட்டில் களமிறங்கினார், ஆனால் அதற்கு உடம்பு சரிவரவில்லை.
அவரின் தற்போதைய நிலை குறித்து பாரதிராஜா சகோதரர் ஜெயராஜ் பேட்டியில், பாரதிராஜாவுக்கு சில நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, வீட்டுக்கு வருபவர்களிடம் மனோஜ் பற்றி சொல்லி அழுகிறார்.
மாடியில் விட்டுவிட்டு வந்தால் அவராகவே கீழே வந்து உட்கார்ந்துகொள்கிறார்.
முக்கியமாக மருமகள் பேத்திகளையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், அவரை நினைத்தால் ரொம்பவே வேதனையாக இருக்கிறது என கூறியுள்ளார்.