அமெரிக்காவில் 22 மாநிலங்களுக்குப் பரவியுள்ள நோய் தொற்று! அதிகரிக்கும் மரணங்கள்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் தட்டம்மை நோய்க்கு மேலுமொரு ஒரு மரணம் பாிவாகியுள்ளது.
நோய்ப்பரவல் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து பதிவாகியுள்ள இரண்டாவது மரணம் இதுவாகும். தடுப்பூசி போடப்படாத உயிரிழந்த சிறுமிக்கு வேறெந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை.
அமெரிக்காவில் தற்போது சுமார் 600 தட்டம்மைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நோய் 22 மாநிலங்களில் பரவியுள்ளது. 2000ஆம் ஆண்டில் தட்டம்மை நோய் அமெரிக்காவில் முற்றாய் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அண்மை ஆண்டுகளில் அந்த நோய்க்கான தடுப்பூசி போடும் விகிதம் குறைந்தது. அதனால் தட்டம்மைச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க சுகாதார அமைச்சர் ராபர்ட் F கென்னடி ஜூனியர் குறைகூறலுக்குள்ளாகியுள்ளார். தடுப்பூசிக்கு எதிராகப் பேசியிருக்கும் அவர் முன்னதாகத் தட்டம்மைக்குச் சிகிச்சையளிக்க நிரூபிக்கப்படாத முறைகளைப் பின்பற்றுமாறு கூறியிருந்தார்.
இப்போது தட்டம்மைக்கு எதிரான சிறந்த வழி தடுப்பூசி என்கிறார். இருமல், தும்மல் ஆகியவற்றின் வழி தட்டம்மை நோய் எளிதில் பரவுகிறது.
நோய்வாய்ப்படும் 1,000 பிள்ளைகளில் ஒருவர் அல்லது இருவர் மரணமடைவதாக நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கூறியது.