பிச்சையெடுக்கும் யோகிபாபு! காரணம் தெரிந்தால் சிரிப்பீர்கள்

விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில், பிச்சைக்காரனான யோகிபாபு க்யூ ஆர் கோடு வைத்து பிச்சை எடுக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும், பிச்சைக்காரன் படத்தைப் போன்று பிச்சைக்காரன் 2 படமும் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
(Visited 12 times, 1 visits today)