பிரபாஸுக்கு வில்லனாக நம்ம மக்கள் செல்வன்? அதிரடி தகவல்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி, சலார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதை தொடர்நது அடுத்து பிரபாஸ் கைவசம் தற்போது பல படங்கள் வைத்து இருக்கிறார்.
அவரது 25வது படத்தை அனிமல் பட புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கப்போகிறார். அந்த படத்திற்கு ஸ்பிரிட் என பெயரிட்டு இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி ராஜாசாப், சலார் 2 ஆகிய படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன.
இந்நிலையில் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்க போகிறாராம். இதற்கு முன் அவர் கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ் உடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.
(Visited 29 times, 1 visits today)





