இஸ்தான்புல் மேயர் உள்ளபட 100 பேருக்கு எதிராக தடுப்பு வாரண்டுகளை பிறப்பித்த துருக்கி அரசாங்கம்!

ஊழல் மற்றும் பயங்கரவாத தொடர்புகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பிரபல எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளருமான இஸ்தான்புல்லின் மேயரை துருக்கிய போலீசார் கைது செய்துள்ளனர்.
துருக்கியில் எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்ப்பு குரல்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் இது ஒரு வியத்தகு அதிகரிப்பு ஆகும்.
மேயர் எக்ரெம் இமாமோக்லு உள்ளிட்ட சுமார் 100 பேருக்கு எதிராக வழக்குரைஞர்கள் தடுப்பு வாரண்டுகளை பிறப்பித்ததாக அரசு நடத்தும் அனடோலு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இமாமோக்லுவின் நெருங்கிய உதவியாளர் முராத் ஓங்குனும் ஒருவர்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்களைத் தடுக்கும் முயற்சியாக, இஸ்தான்புல்லை சுற்றியுள்ள பல சாலைகளை அதிகாரிகள் மூடி, நான்கு நாட்களுக்கு நகரில் ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.