பிரபல நடிகை பிந்து கோஷ் திடீர் மரணம்

80களில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருந்தவர் பிந்து கோஷ். குண்டான தோற்றம், வெகுளியான நடிப்பு என மக்களை அவர் கவர்ந்தார்.
தற்போது 76 வயதாகும் அவர் அதிகம் ஒல்லியாகி வறுமையில் சாப்பிட கூட வழி இல்லாமல் இருப்பதாக பேட்டி கொடுத்து இருந்தார்.
சினிமாவில் நன்றாக சம்பாதித்து இருந்தாலும், குடிகார கணவர் அனைத்தையும் குடித்தே அழித்துவிட்டார். உடலில் பல பிரச்சனைகள் இருக்கிறது, மருந்துகளுக்கே மாதம் அதிகம் செலவாகிறது, பல நடிகர்களுக்கு போன் செய்து உதவி கேட்டேன் யாரும் செய்யவில்லை எனவும் அவர் கண்கலங்கி பேசி இருந்தார்.
இந்நிலையில் இன்று பிந்து கோஷ் உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்து இருக்கிறார்.
இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)