மீண்டும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘2018’.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஓம் சாந்தி ஒஷானா’ படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார்.
தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை முழு அளவில் திரையரங்கிற்கு அழைத்து வரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)